தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஜூன் 13) முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாஅலுவலகத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

SCROLL FOR NEXT