திடீர் பள்ளம் 
தமிழகம்

கோவை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

இல.ராஜகோபால்

கோவை: கோவையில் தண்ணீர் குழாய் உடைந்ததால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலை கல்லூரி சாலையில் இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் குழாய் உடைப்பு காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT