ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சிறப்பு வழிபாடு செய்ய வந்த பாஜகவினர். 
தமிழகம்

பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்பு: பாஜகவினர் சிறப்பு வழிபாடு @ ராமேசுவரம் 

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு இன்று மாலை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாஜக சார்பாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 09) மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதனை முன்னிட்டு இன்று மாலை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாஜக சார்பாக சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட பாஜக பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தர்ர். தொடர்ந்து ராமேசுவரம் நான்கு ரத வீதிகளில் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து பாஜக தொண்டர்கள் கொண்டாடினர்.

முன்னதாக நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை சரியாக 7.23 மணிக்கு நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT