தமிழகம்

பிரதமர் பதவியேற்பு விழா: சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநருக்கு அழைப்பு

என்.சன்னாசி

மதுரை: புதிதாக பொறுப்பேற்கவுள்ள மத்திய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள மத்திய அரசின் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடக்கிறது. இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப் பெற்றுள்ளது. சென்னை - விஜயவாடா, சென்னை - கோவை பிரிவில் தொடக்க நாள் முதலே ‘வந்தே பாரத்’ ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT