கோப்புப்படம் 
தமிழகம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

கி.கணேஷ்

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் பிரதமர் மோடி பின்னடைவு என்று தகவல் வெளியானதும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த அளவில் பாஜக கூட்டணியை தொடர்ந்து இண்டியா கூட்டணி அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வாராணசி தொகுதியில் பின்னடைவு சந்தித்ததாக முதலில் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு எதிராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT