ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் பலாப்பழத்தை வைத்து வழிபாடு நடத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வ கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிட்ட சின்னமான பலாப்பழத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது குலதெய்வக் கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

பலாப்பழத்தை வைத்து... இந்நிலையில், நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதில், செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலில், தனது சின்னமான பலாப்பழத்தை வைத்து ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT