தமிழகம்

பழவேற்காடு மோதல்: மேலும் 33 பேர் கைது

செய்திப்பிரிவு

பழவேற்காட்டில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக வெள்ளிக்கிழமை மேலும் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த பழவேற் காட்டு ஏரியில் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது தொடர் பாக, தமிழக மற்றும் ஆந்திர மீனவர்களுக்கு இடையே கடந்த 12-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது, ஆயிரக் கணக்கான ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவ கிராமமான சின்ன மாங்கோட்டில் உள்ள விசைப் படகுகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும் தாக்கப்பட்டனர்.

இதில், 60 வீடுகள் மற்றும் 48 விசைப் படகுகள் சேதம் அடைந்தன. காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 7 காவலர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஆரம்பாக்கம் போலீ ஸார் வெள்ளிக்கிழமை மேலும் 33 ஆந்திர மீனவர் களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தப்பட்டு, புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT