மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவரை கஞ்சா வழக்கில் தேனி மாவட்டம் பிசிபட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சங்கர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி செங்கமல செல்வன் முன்பு இன்று (மே.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.