தமிழகம்

பிரதமர் பேசியதை முதல்வர் திரித்து பேசுவதாக தமிழிசை கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசுகிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி ஒட்டுமொத்த தமிழர்களை அவமதித்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார். மோடி, ஒடிசாவில் தனிநபரை குறிப்பிட்டு பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களை அவமதித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் திரித்து கூறுகிறார். இதை, தமிழர்களை முதல்வர் ஸ்டாலின்தான் அவமானப்படுத்துகிறார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்டாலின்தான் திரித்துபேசி வழக்கம்போல் பொய் பிரச்சாரம் செய்கிறார். மு.க.ஸ்டாலின் திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT