சென்னை: இந்தோனேசியாவில் நடைபெறும் உலக நீர் மன்றக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு பங்கேற்றார். உலக நீர் மன்றம் என்பது உலக நீர் கவுன்சில் சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய நிகழ்வாகும். இதில் தண்ணீர் தொடர்பான பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
அந்த வகையில் 10-வது உலக நீர் மன்ற கூட்டம் இந்தோனேசியா வின் பாலி நகரில் மே 18-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘பகிரப்பட்ட செழிப்புக்கான நீர்’ என்ற கருத்தை மையப்படுத்தி நடைபெறும் இந்நிகழ்வில் உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இந்திய அரசின் சார்பில் திமுக எம்.பி கனிமொழி சோமுவும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. அசோக் மிட்டலும் கலந்துகொண்டனர். அவர்கள், தண்ணீர் பாதுகாப்பில் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால திட்டங்களை எடுத்துரைத்தனர். இக்கூட்டம் மே 25-ம் தேதி முடிவடைகிறது.