தமிழகம்

வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் நிறைவு

செய்திப்பிரிவு

பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்ட நடைபயணம் நேற்று முடிவடைந்தது.

இதையொட்டி போடியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் பூகம்பம் ஏற்பட்டு முல்லை பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும். 5 மாவட்ட விவசாயிகளுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் நீர் கிடைக்காது. இத்திட்டத்தை வரவிடாமல் தடுத்தால் மட்டுமே நாமும், நம் சந்ததியும் வாழ முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT