தமிழகம்

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

உள் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீடாமங்கலம், போடிநாயக்கனூரில் தலா 20 மில்லி மீட்டரும், பெரியகுளம், ஒகேனக்கல், நீலகிரி மாவட்டம் ஜி.பஜார், ஓசூர் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இன்றைய (புதன்கிழமை) வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

உள் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். தமிழகத்தின் இதர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT