தமிழகம்

வெப்ப அலை அதிகரித்தால் திறந்தவெளி கட்டுமானப் பணிகளை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வெப்ப அலை அதிகம் வீசினால் மட்டும், திறந்த வெளியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெப்ப அலை வீசுவதால், சென்னை, மதுரை மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 4 வரை திறந்தவெளி கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அந்தந்த மாவட்ட மண்டல இணை இயக்குநர்களுக்கு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அனைத்து பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, கோடை மழை பெய்து வருகிறது. இதையடுத்து, வெப்பநிலை குறைந்துள்ளதால், திறந்த வெளியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கலாம் என்றும், ஒருவேளை வெப்ப அலை அதிகரிக்குமானால் மீண்டும் கட்டுப்பாடுகளைவிதிக்கலாம் என்றும் மண்டல இணை இயக்குநர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT