கோப்புப் படம் 
தமிழகம்

சாலைகளில் தானாக பற்றி எரியும் வாகனங்கள்: தமிழக அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சாலைகளில் தானாக பற்றி எரியும் வாகனங்கள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் தீ விபத்துகள் கண்டறியப்படுகின்றன.

காரணம் என்ன? - அவ்விபத்துகள் பற்றி ஆய்வுசெய்தபோது, மோட்டார் வாகனங்களில் மாறுதல்களைச் செய்யும்போது, சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றை மாற்றும்போது, அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே வாகனங்கள் தீவிபத்துக்குள்ளாகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT