தமிழகம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஒன்றரை வயது குழந்தை: அபாய சங்கிலியை இழுத்து மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (30). இவர் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தை பிரகதீஸ்வரியுடன் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் பயணம் செய்தார்.

இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10-வது நடைமேடைக்கு நேற்று மாலை வந்துகொண்டிருந்தது. அப்போது, படிக்கட்டு அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், ரயில் பெட்டியில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர், ரயிலில் இருந்து கீழே இறங்கி குழந்தையை ரவிக்குமார் மீட்டார். இந்த சம்பவத்தில் லேசான காயத்துடன் குழந்தை உயிர் தப்பியது.

தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த முதலுதவி மையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தையை ரவிக்குமாரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT