தமிழகம்

அரசு பேருந்துகளில் குழந்தைகள் பயணம்: நடத்துநர்களுக்கு புதிய அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துத் துறை நடத்துநர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்கள்: அரசு போக்குவரத்துக் கழகபுறநகர் பேருந்துகளில் பயணம்மேற்கொள்ளும் 5 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து சந்தேகங்கள் ஏற்படின், பிறந்தநாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

இருந்தபோதிலும், நடத்துநர்கள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே, எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT