கோவை: யூ டியூபர் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 14-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பெண் போலீஸாரை அவதூறாக பேசிய புகாரில், யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணபாபு, ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.