சென்னை: சென்னை விமான நிலையத்தில் விஐபி வருகை பகுதியில் கண்ணாடிகதவு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூரை பால்சீலிங்குகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்தது. கடந்த ஆண்டு பெரியகண்ணாடி கதவு ஒன்று உடைந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முக்கிய பிரமுகர்களின் வழி: இந்நிலையில் நேற்று சென்னைஉள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்று வருகை பகுதியில் 4-வது கேட்டில் உள்ள 7 அடி உயரம்கொண்ட கண்ணாடி கதவு திடீரெனபயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.
அந்த கண்ணாடி தடிமனாக இருந்ததால், சிதறி கீழேவிழாமல், நொறுங்கி கதவிலேயே இருந்தது. ஆளுநர்கள், தூதர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டும் திறக்கப்படும் 4-வது கேட்டில்நொறுங்கிய கண்ணாடி கதவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர், நொறுங்கிய கண்ணாடி கதவை அகற்றிவிட்டு, புதிய கண்ணாடி கதவு அமைக்கப்பட்டது. கண்ணாடி கதவு உடைந்ததற்கு காரணம் கடுமையான வெயிலாஅல்லது விமான நிலையத்தில் இரண்டாவது கட்ட கட்டுமான பணிகளில் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், ஏற்பட்ட அதிர்வுகள் காரணமா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் கண்ணாடி கதவு உடைந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.