தமிழகம்

தவறான, பழைய தகவல்களுடன் சென்னை மாநகராட்சி இணையதளம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தவறான, பழைய தகவல்களே இருப்பதால் அதை பார்ப்பவர்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது.

அனைத்து தகவல்களுக்கும் இணையத்தை தேடும் தலைமுறை யினர் வாழும் காலக் கட்டத்தில், தமிழகத்தின் தலைநகரை ஆளும் பொறுப்பில் உள்ள சென்னை மாநகராட்சி தனது இணைய தளத்தை மேம்படுத்தாமல் உள்ளது. அதில் உள்ள சில தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. சில பக்கங்களில் சென்னை விரி வாக்கப்படுவதற்கு முன்பு இருந்த பழைய தகவல்களே உள்ளன.

மாநகராட்சி இணையதளத்தின் படி, அதன் சுகாதாரத் துறையின் கீழ் 75 சுகாதார மையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் உண்மையில் தற்போது 94 சுகாதார மையங்கள் உள்ளன. அதே போல் 93 நல வாழ்வு மையங்கள் உள்ளன என்று இணையதளம் கூறுகிறது. ஆனால், 122 மையங்கள் உள்ளன. கல்வித் துறையில் 2013-ம் ஆண்டில் உளவியல் ஆலோச கர்களை பணிக்கு அமர்த்தும்போது கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் இன்னும் நீக்கப்படவில்லை. கல்வித் துறையின் இணைய பக்கத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டது போல அது உள்ளது.

மேலும் சில தகவல்கள் முன் னுக்கு பின் முரணாக காணப் படுவதால், அதை பார்க்கும் மக்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது. சுகாதாரத் துறையின் கீழ் கொடுக்கப்பட்ட தகவல் படி எரிவாயு தகன மேடை மூலகொத்தலத்தில் மட்டுமே உள்ளது. ஆனால், மின்சாரத் துறை யின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவல் படி, எரிவாயு தகன மேடைகள் மூலகொத்தலம், கண்ணம்மாப்பேட்டை, பெசன்ட் நகர், மயிலாப்பூர், காசிமேடு, வியாசர்பாடி, ஓட்டேரி, தாங்கல், வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன.

ஒரு சில நிகழ்வுகளின் தகவல்கள் மட்டும் அவ்வப்போது இணையதளத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. ஆனால், அதுவும் உடனுக்குடன் தொடர்ந்து செய்யப் படுவதில்லை. எனவே, மாநகராட்சி வசதிகளை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் ஏமாற்றம் அடை கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், “மாநகராட்சி இணையதளத்தை பராமரிக்க ஒரு குழு உள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு துறையிலிருந்தும் தக வல்கள் தரப்பட வேண்டும். புதிய தகவல்கள் இன்னும் தரப்படாததால் இணையதளத்தில் அவை மாற்றப் படவில்லை. விரைவில் அவை சரிசெய்யப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT