அர்ஷன் 
தமிழகம்

ரத்தினகிரி அருகே வெயில் தாக்கத்தால் சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த டி.சி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெண்ணிலா(40), மகன்கள் அர்ஷன் (14), பரத் (12). இந்நிலையில், நேற்று நால்வரும் அங்குள்ள மூங்கில் வாழியம்மன் கோயிலுக்குச் சென்றனர்.

மலை மீதுள்ளதால் இந்தக் கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து சென்றனர். அப்போது, அதிக வெயில் காரணமாக அர்ஷன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை சிஎம்சி ரத்தினகிரி வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அர்ஷனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT