குமார் 
தமிழகம்

வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் 2017-ல் ஆணையராகப் பணிபுரிந்த குமார், கொசுமருந்து தெளிக்கும் ஒப்பந்ததாரர் பாலாஜியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 2017-ல் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஆணையர் குமாருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம்அபராதம் விதித்து நீதிபதிராதாகிருஷ்ணன் நேற்றுதீர்ப்பளித்தார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட குமார்,தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராகப் பணியாற்றிய நிலையில்,கடந்த ஓராண்டுக்கு முன் இந்தலஞ்ச வழக்கின் காரணமாக அவரது பணி ஓய்வு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT