தமிழகம்

மே 6-ல் மதிமுக கட்சியின் 31-ம் ஆண்டு தொடக்க விழா: வைகோ கொடியேற்றுகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: வரும் 6-ம் தேதி மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 31-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகமான தாயகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று, கட்சிக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்குகிறார்.

தொடர்ந்து காலை 10 மணியளவில் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் கட்சியினர் ரத்த தானம் செய்கின்றனர்.

அறிவுறுத்தல்: மேலும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்காக நன்கொடை வசூலிக்க தலைமையிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி நன்கொடை ரசீது புத்தகங்களில் மீதமுள்ள ரசீது புத்தகங்கள் மற்றும் வசூலிக்க பயன்படுத்திய ரசீது புத்தகங்களையும் மேமாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT