தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.30 முதல் மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதனால் ஏப்.30, மே 1 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். மே 2-ல்மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT