மதுரை: தேர்தல் பணிகள் முடிய நள்ளிரவு வரை ஆனதால், வாக்குச் சாவடிகளில் இருந்து வீடு திரும்ப முடியாமல் பெண் தேர்தல் அலு வலர்கள் தவிப்புக்குள் ளாகினர். இனிவரும் காலங்களிலாவது பெண் அலுவலர்கள் வீடு திரும்ப வாகன வசதி ஏற்படுத்தித் தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 1,573 வாக்குச் சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிகளில் பி-ஓ, பி-1, பி-2, பி-3 ஆகிய பணிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பி-ஓ பணியில் பட்டமேற்படிப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தான், வாக்குப்பதிவை நடத்த வேண்டும். மேலும், வாக்குச் சாவடிக்கு பொறுப்பாளராகவும் இருந்தனர்.
வாக்குச் சாவடி தவிர்த்த பிற தேர்தல் பணிகளில் வரு வாய்த் துறை, மாநகராட்சிப் பணி யாளர்கள் நியமிக்கப்பட்டனர். வாக்குச் சாவடிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் பள்ளி, குடியி ருக்கும் வீடுகளில் இருந்து குறைந்தபட்சம் 15 கி.மீ. முதல் 50 கி.மீ. தொலைவில் பணியமர்த்தப்பட்டனர். வாக்குச் சாவடிகளில் முந்தைய நாளில் வாக்குப் பதிவு இயந்திரம் ஒப்படைப்பு, அதை மறுநாள் வாக்குப் பதிவுக்கு தயாராக வைத்திருப்பது உள்ளிட்ட பணி களுக்காக அலுவலர்கள் வாக்குச் சாவடிகளிலேயே தங்க வேண்டும்.
ஆனால், கடந்த காலங்களை போலவே வாக்குச் சாவடிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தராததால், பெரும்பாலான அலுவலர்கள் அங்கு தங்கவில்லை. மாறாக, தேர்தல் நாளன்று அதி காலையில்தான் வாக்குச் சாவ டிக்கு வந்து சேர்ந்தனர். அதனால், வாக்குச் சாவடி பொறுப்பாளரான பி-ஓ அல்லது அவருடன் ஒரு சில தேர்தல் அலுவலர்கள் மட்டுமே வாக்குச் சாவடியில் முந்தைய நாள் இரவு தங்கினர்.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும், வாக்குப் பதிவு விவரங்களையும், அதற்கான கோப்புகளையும் தயார் செய்து, தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒப்படைக்கும் வரை அலுவலர்கள் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடி யாக சென்று வாக்குப் பதிவு இயந்திரங்களை இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தேர்தல் அதிகாரிகள் பெற வருவர். அதுவரை வாக்குச்சாவடி அலுவலர்கள் யாரும் தூங்கவும் முடியாது, வீட்டுக்குச் செல்லவும் முடியாது.
வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒப்படைத்த பின்னரே அவர்கள் வீடு திரும்ப முடியும். இந்நிலையில், நள்ளிரவில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஒப்படைத்த பின்னர், வீடு திரும்ப முடியாமல் பல பெண் அலுவலர்கள் தவிப்புக்குள்ளாகினர். ஆனால், பெண் அலுவலர்கள் நள்ளிரவில் தங்களது வீடுக ளுக்குத் திரும்புவதற்கு தேவையான வாகன வசதிகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தருவதில்லை.
இதனால் அவர்கள் அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற் பட்டது. எனவே, வருங்காலங்களிலாவது தேர்தல் பணியாற்றும் பெண் அலுவலர்கள் நள்ளிரவில் வீடு திரும்புவதற்கான வாகன வசதி களை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தரவேண்டும், என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.