மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்றுசுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவிக்கும் வாக்குப்பதிவு சதவீதத்தில் எப்போதும் வித்தியாசம் வரத்தான் செய்யும். அதிமுகவை மீட்பது குறித்து கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பாருங்கள். அது நடக்கும். பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி நடத்தியுள்ளார். அவரது ஆட்சியில் எங்கும் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.