சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், 69.72 % ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்-21) இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 81. 20 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.69 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் (ஏப்.19) அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியிருந்தது. அதாவது, தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகு, முதலில் 72 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்திருந்தார்.
இதையடுத்து நள்ளிரவில் அதை மாற்றி, 69.46 சதவிகித ஓட்டுகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் 69.72 % ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20% , குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 53.96 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு எண்ணிக்கை மூன்றாவது முறையாக மாற்றி கூறப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.
விவரங்கள் பின்வருமாறு: