சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவரை மீட்டுத் தர வலியுறுத்தி குழந்தைகளுடன் புகார் அளிக்க வந்த மதுபாலா. ( உள் படம் ) பார்த்திபன். 
தமிழகம்

அறையில் பூட்டி வைத்து துபாயில் கணவரை கொடுமைப் படுத்துவதாக மனைவி புகார் @ சிவகங்கை

செய்திப்பிரிவு

சிவகங்கை: துபாய் நாட்டில் தனது கணவரை அறையில் பூட்டி வைத்து கொடு மைப்படுத்துவதாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குழந்தைகளுடன் வந்து பெண் ஒருவர் புகார் அளித்தார்.

சிவகங்கை அருகே உள்ள கூத்தாண்டத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் ( 34 ). இவரது மனைவி மதுபாலா ( 28 ). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. குடும்ப வறுமை காரணமாக, 3 மாதங்களுக்கு முன் பார்த்திபன் துபாய் நாட்டில் கட்டிட வேலைக்குச் சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் துபாயில் பார்த்திபனை அறையில் பூட்டி வைத்து ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ மதுபாலாவுக்கு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது கணவரை அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி வருகின்றனர். அந்த வீடியோ எனது கணவர் தான் எனக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர், அவரை நாங்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரிய வில்லை. இதனால் அவரை மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

SCROLL FOR NEXT