எல்.முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

நீலகிரியில் பாஜகவுக்கு 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேற்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சி மற்றும் 2047-ல் நாடு வல்லரசாக வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சிக்காக, ஊழல் இல்லாத ஆட்சி அமைவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் பாஜகவின் வெற்றி 100 சதவீதம் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT