யாரும் அறியாமல் வரிசையில் நின்றிருந்த முன்னாள் பெண் எம்எல்ஏ பக்கிரியம்மாள். 
தமிழகம்

‘அரசியல் மாறிப் போச்சு...’ - யாரும் அறியாமல் வரிசையில் நின்றிருந்த முன்னாள் பெண் எம்எல்ஏ @ புதுச்சேரி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் பெண் எம்எல்ஏ யாரும் அறியாமல் வரிசையில் நின்று வாக்களித்தார். புதுவையில் 1963-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து வருகிறது. முதல் பெண் எம்எல்ஏவாக 17 ஆண்டுக்கு பிறகு 1980-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரேணுகா அப்பாதுரை வெற்றி பெற்றார்.

இவர்தான் புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் இடம்பெற்ற முதல் பெண் எம்எல்ஏ, அமைச்சர் ஆவார். அதன்பிறகு 1985-ல் திருபுவனை தொகுதியில் கோமளா, 1991-ல் ஏம்பலத்தில் பக்கிரியம்மாள், 1996-ல் திருபுவனையில் அரசி ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்று சட்டப்பேரவையில் இடம்பெற்றனர்.

இதன்பின் சுமார் 20ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் இல்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத்தேர்தலில் 4 பெண் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். நெட்டப்பாக்கம் தொகுதியில் விஜயவேணி, திருபுவனைகோபிகா, காரைக்கால் நெடுங்காடு சந்திரபிரியங்கா, நிரவிடிஆர் பட்டினம் கீதா ஆனந்தன் ஆகியோர் எம்எல்ஏக்களாக இருந்தனர்.

கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் சந்திரபிரியங்கா மட்டும் வெற்றி பெற்றார். கடந்த 1991–96-ம் ஆண்டில்ஏம்பலம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றவர் முன்னாள் எம்எல்ஏ பக்கிரியம்மாள். 74 வயதான அவர்,அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் சாதாரணமாக நின்றிருந்தார்.அவரை அடையாளம் கண்டு கேட்டதற்கு, காலம் வேகமாக ஓடிவிட்டது.

அப்போதைய அரசியல்வேறு; இப்போதைய அரசியல்வேறு.என்னதான் இருந்தாலும் ஜனநாயக திருவிழாவில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதனால் தான் வாக்களிக்க வந்தேன் என்றார். இயல்பாக வரிசையில் நின்றஅவர் முன்னாள் எம்எல்ஏ என்பது பலருக்கும் அதன்பின்புதான் தெரிந்தது.

SCROLL FOR NEXT