சென்னை: மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும்வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதை கட்டாயமாக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி கமிலஸ் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு நேற்று விசாரித்தது. ‘‘இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இதை விசாரணைக்கு ஏற்க முடியாது’’ என்று மறுப்பு தெரிவித்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.