கோவை பூவாளுபட்டி அருகே பாஜக நிர்வாகியிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.81 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் 
தமிழகம்

கோவையில் பாஜக நிர்வாகியிடம் ரூ.81,000 பறிமுதல்

இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டபோது, சந்தேகத்திக்கிடமான வகையில் நின்ற ஜோதிமணி (37) என்பவரிம் விசாரணை நடத்தினர். அவர் அரசு டிரைவராக பணியாற்றி வருவதும், ஆலந்துறை பகுதியின் பாஜக மண்டல தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

அதன்பின், ஜோதிமணியிடம் இருந்து ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் செய்து, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணமா என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT