விருதுநகர்: விருதுநகரில் பிரச்சார வாகனத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால், தேமுதிக மற்றும் கூட்டணிக்கடசியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, அவரது தம்பி சண்முகப்பாண்டியன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். விருதுநகர் தெப்பம் அருகே பிரச்சாரப்பயணத்தை அவர் தொடங்கினார்.
அப்போது, பஜார் வழியாக பிரச்சார வாகனம் செல்ல அனுமதிஇல்லை என போலீஸார் தடுத்துநிறுத்தினர். இதையடுத்து, போலீஸாருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் மற்றும்கூட்டணிக் கட்சியினர், அங்குசாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து, சண்முகப்பாண்டியன் மற்றும் கட்சியினர் பிரச்சார வாகனத்தை நிறுத்திவிட்டு, பஜார் வழியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தனர். பின்னர், பழைய பேருந்து நிலையம் அருகேமீண்டும் ஜீப்பில் ஏறி சண்முகப்பாண்டியன் பிரச்சாரத்தை தொடர்ந்தார்.