தமிழகம்

மருத்துவமனையில் மன்சூர் அலிகானுக்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர் தொகுதி முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரித்து வந்தார். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்ததால், பிற்பகல் நேரத்தில் குடியாத்தம் பகுதியில் அவர் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை பெற்றார். பின்னர், மாலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT