சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இன்றும், நாளையும் (ஏப்.17,18) சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக் கூடிய 2,092பேருந்துகளுடன் 2,970 சிறப்புப்பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,060 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தேர்தல் முடிந்த பிறகு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு ஏப்.20, 21 தேதிகளில்தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,825 சிறப்புப் பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்புபேருந்துகளும் இயக்கப்படுகின் றன. அதன்படி, 4 நாள்களுக்கும் சேர்த்து 10,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை விழா காலங்களைப் போல தற்காலிக நிலையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலும் காஞ்சிபுரம், வேலூர், ஆரணி செல்லும் பேருந்துகள் தாம்பரம் வள்ளுவர் குருகுல பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் புறப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, செல்லும் பேருந்துகள் மற்றும்பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, தருமபுரி , கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும் இயக்கப்படும்.
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாகஆந்திர மாநிலத்துக்குச் செல்லும்பேருந்துகள் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.