தமிழகம்

மகனுக்கு வாக்கு கேட்கும் வசந்தகுமார்: ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பரவும் வீடியோ

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் எம்.பி., வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அவரது மகன் விஜய் வசந்துக்கு வாக்குகேட்டு பேசுவது போன்று, `ஏஐ` நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வசந்தகுமாரின் 74-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, “கன்னியாகுமரி சொந்தங்களே... நான் உங்கள் வசந்தகுமார் பேசுகிறேன்” என தொடங்குகிறது. தொடர்ந்து, “உடலால் உங்களை விட்டு பிரிந்தாலும், மனதளவில் உங்களுடன் இருக்கிறேன். எனது எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்ற கிடைத்த வாய்ப்பு எனது மகன் விஜய் வசந்த்.

குமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், உங்களுக்கு பாதுகாவலனாகவும் எனது மகன் விஜய் வசந்த் செயல்படுவான்” என்பன போன்ற வாசகங்களை வசந்தகுமார் பேசுவதுபோன்று அந்த வீ்டியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, குமரி தேர்தல் பிரச்சாரத்திலும், சமூக வலைதளங்களிலும் காங்கிரஸார் ஒளிபரப்பி வருகின்றனர்.

SCROLL FOR NEXT