தமிழகம்

தொண்டர் வீட்டில் உணவருந்திய அண்ணாமலை

செய்திப்பிரிவு

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை கோவனூர் பகுதி பெருமாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்து, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் கரிவரத பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். துடியலூர் முத்துநகர் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மக்களுடன் ஜமாப் அடித்தார்.

அப்பகுதியில் உள்ள ஏழைப் பெண் தொண்டரான ஆனந்தி என்பவர் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக துடியலூர் விநாயகர் கோயில் அருகே ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

SCROLL FOR NEXT