கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானைக் கூட்டம்ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், வனத் துறையினர் யானைக் கூட்டத்தை காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது ஊருக்குள் நுழையும் யானைகள், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் புதுப்பாளையம்-மாதம்பட்டி வழியாக குட்டியுடன் வந்த14 யானைகள், தொண்டாமுத்தூர்-நரசிபுரம் சாலையைக் கடந்து சென்றன. இதைப் பார்த்தவாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தகவலறிந்து வந்தவனத் துறையினர், மாதம்பட்டி, சுண்டப்பாளையம் வழியாக, யானைமடுவு காப்புக் காட்டுக்குள் யானைகளை விரட்டினர்.