சாத்தூர்: திராவிடத்தை ஒழிப்பேன் என்று பிரதமர் மோடி பேசலாமா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, சாத்தூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: இந்த தேர்தல் இந்திய வரலாற் றில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தேர்தல். ஜனநாயகமா..? சர்வாதிகாரமா..? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல். மக்களாட்சியா அல்லது பாசிச கூட்டமா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல்.
பிரதமர் மோடி திராவிடத்தை ஒழிப்பேன் என்று பேசலாமா? இதுவரை இதுபோன்று எந்தப் பிரதமரும் பேசியதில்லை. தியாகத்தாலும், ரத்தத்தாலும் உருவாக்கப்பட்ட இந்த இயக் கத்தை காக்க எத்தனை முறை சிறை சென்றோம் என்று எங்க ளுக்கே தெரியாது.
நானே திமுக தொண்டனாக இருந்து 24 முறை சிறை சென்றுள்ளேன். தியாகத்தால் உருவாக்கப்பட்ட கட்சியை அழிப்பேன் என்று பிரதமர் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் உடன் இருந்தார்.