உதகை ஏடிசி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திரைப்பட நடன இயக்குநர் கலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள். 
தமிழகம்

நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடன இயக்குநர் கலா பிரச்சாரம்

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, உதகையில் திரைப்பட நடன இயக்குநர் கலா நேற்று பிரச்சாரம் செய்தார்.

உதகை ஏடிசி பகுதியில் பேருந்துக்காக நின்றிருந்த மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரித்து, செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாஜக நல்ல முறையில் வெற்றி பெறும். பிரதமர் மோடியை நம்பித்தான் நீலகிரி மக்கள் இருக்கிறார்கள். ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் எல்.முருகன். உதகை வளர்ச்சியடையாமல் அப்படியே உள்ளது.

முன்பெல்லாம் உதகையில் சூட்டிங் நடக்கும்போது, சின்ன கோடம்பாக்கமாக இருந்தது. ஆனால், இப்போது சூட்டிங் நடப்பதில்லை. இங்கு எல்.முருகனால் தான் வளர்ச்சியை கொண்டுவர முடியும். அவர் தான் நேரடியாக மோடியிடம் பேசக் கூடியவர். அவசர கால ஹெலிகாப்டர் போக்கு வரத்தை தொடங்க உள்ளார். மக்களிடம் நல்ல வரவேற்புள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT