மதுரை: தாலிக்குத் தங்கம் திட்டம் அதிமுக ஆட்சியில் நிறுத்திவிட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சையாகப் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த திட்டத்தில் மூலம் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 12.50 லட்சம் ஏழைப் பெண்கள் பயன் பெற்றனர்.
ஆனால் மதுரையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக ஆட்சியின் போது ரத்து செய்துவிட்டதாக பச்சைப் பொய்யைக் கூறுகிறார். அவர் கூறுவது உண்மை அல்ல. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.