தமிழகம்

திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் நிறைவேற்றியது எத்தனை? - ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், தங்கள் குடும்பத்தின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021 தேர்தலின்போது, திமுககொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் மத்திய அரசிடம் நிறைவேற்றக் கோரியிருக்கிறார்.

திமுகவும் காங்கிரஸும் கச்சத்தீவை தாரைவார்த்ததன் விளைவு,நமது மீனவர்கள், இத்தனைஆண்டுகளாகப் பாதிக்கப்படுகின் றனர். அனைத்து மாநிலங்களும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்க, போலி சமூக நீதி நாடகமாடிக் கொண்டிருக்கிறதுதிமுக. நீட் தேர்வு, ஏழை எளிய மாணவர்களும் மருத்துவக் கல்விபெற ஒரு வரப் பிரசாதம். திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சம்பாதிக்க, நாங்கள் ஏன் நீட் தேர்வை விலக்க வேண்டும்? 2021 தேர்தலின்போது, 511 வாக்குறுதிகள் கொடுத்ததிமுக, அவற்றில் எத்தனை நிறைவேற்றியிருக்கிறது.

முதல்வர் பதவிக்குச் சற்றும்பொறுப்பில்லாமல், மக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களை தெரிவிக்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT