சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.10)வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கடலோர மாவட்டங்கள் மற்றும்அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பொதுவாக இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்ககூடும். சென்னை புறநகரில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன்காணப்படும் என கூறப்பட்டுள்ளது.