தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது 
தமிழகம்

கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது

ந.முருகவேல்

கடலூர்: கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தொகுதிக்குட்பட்ட தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் சாலை ஓரத்தில் நின்று இருந்த கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் எனக் கூறியுள்ளார் கிளி ஜோசியக்காரர்.

தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறையினர் கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT