தமிழகம்

பெரம்பூரில் ஓய்வுபெற்ற கனிமவள அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சத்தீஸ்கர் மாநில கனிமவளத் துறையில் பொதுமேலாளராக பணியாற்றிஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் சென்னை பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை திடீரென சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழு இவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் மாநில கனிமவளத் துறையில் அவர் பணியாற்றிய போது, தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தற்போது அது தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதால், அவரது வீட்டில் முறைகேடு தொடர்பான சோதனையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஓய்வுபெற்ற அதிகாரியையும், அவரது மனைவியையும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே சத்தீஸ்கர் மாநில டெண்டரில் என்ன முறைகேடு நடந்தது? யார் யார் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT