தமிழகம்

உரிமைத் தொகை ரூ.1,000 கிடைக்காத பெண்களை கை தூக்க சொன்ன அமைச்சர்!

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சிங்கம்புணரி, கரிசல்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மக்கள் கேள்வி கேட்காத வகையில் கே.ஆர்.பெரிய கருப்பன் தனது பிரச்சார வியூகத்தை மாற்றி உள்ளார். அவர் ஏப்.7-ம் தேதி திருப் பத்தூர் ஒன்றியப் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு நின்றிருந்த பெண்களிடம் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வில்லை என கை தூக்கச் சொன்னார். பிறகு அவர்களை எண்ணியதோடு ஊருக்கு 10 பேருக்கு கிடைக்காமல் உள்ளது. மொத்தம் 5 சதவீதம் தான் கொடுக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கும் வழங்கி மனம் குளிரச்செய்வோம் என்று கூறினார்.

மேலும் இங்கு வராத பெண்கள் யாருக்காவது மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் இருந்தால், அவர்களுக்கும் விரைவில் கிடைக்கும். நானே ( அமைச்சர் பெரிய கருப்பன் ) சொல்கிறேன். ஆகவே, தைரிய மாக காங்கிரஸுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என்று அமைச்சர் பேசினார். அவரின் இந்தப் பேச்சுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், இதே பாணியில், அமைச்சர் பெரியகருப்பன் தான் செல்லும் இடங்களில் எல்லாம் தனது பிரச்சாரத்தை மாற்றி உள்ளார்.

SCROLL FOR NEXT