சென்னை: சென்னையில் 3-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாசெய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 5-ம் தேதி முதல்வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 3-வது நாளாக சென்னைதிருவான்மியூரில் வசிக்கும் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற உதவி செயற் பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு முழு விவரங்கள் வெளியிடப்படும் என வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.