தமிழகம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்: மருத்துவ ஆலோசகர் பேச்சு

செய்திப்பிரிவு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவுத்திறன் அதிகமாக இருக்கும் என்று தாய்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

சென்னை அடையாரில் உள்ள போர்டீஸ் மலர் மருத்துவ மனையில் ‘உலக தாய்பால் வார விழா’ ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தாய்ப்பால் ஆலோசகர் டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன் பேசியதாவது:

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. மேலும், தாய்பால் கொடுக்கும் பெண் களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

குழந்தைகளின் எடையும் சரியாக இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதால், தாயின் இளமைத் தோற்றம் குறையும் என்ற மூடநம்பிக்கை சில பெண்களிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. தாய்பால் கொடுக்கும் பெண்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பார்கள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவுத்திறன் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்போரின் எண்ணிக்கை 33 சதவீதமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெண் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும், அருகில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

          
SCROLL FOR NEXT