ராஜபாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தென்காசி தொகுதி வேட்பாளர் ஜான்பாண்டியன். 
தமிழகம்

“பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள்” - ஜான்பாண்டியன் தகவல்

செய்திப்பிரிவு

ராஜபாளையம்: `பிரதமர் நரேந்திர மோடியும், நானும் நல்ல நண்பர்கள். அவர் சொல்லித்தான் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன் என அத்தொகுதியின் வேட்பாளர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன் னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் போட்டி யிடுகிறார். அவர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடியும், நானும் நல்ல நண்பர்கள். அண்ணாமலையும் எனக்கு நண்பர்தான். தென்காசி தொகுதியில் இதற்கு முன் வெற்றி பெற்றவர்கள், அப்பகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வில்லை. நீங்கள் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு, அம்மக்களுக்கு நல்லது செய்யுங்கள் எனச் சொன்னார்கள். அதனால்தான் நான் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக சமுதாயப் பணிகள் செய்து வருகிறேன்.

தென்காசி தொகுதியை வளர்ச்சி அடையச் செய்ய பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். திமுக, அதிமுகவால் பிரதமர் வேட்பாளர் பெயரை குறிப்பிட்டு வாக்குக் கேட்க முடியாது. மத்தியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி. காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. இத்தொகுதியில் 2 முறை வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் எதுவும் செய்ய வில்லை. அதிமுக மூன்றாக உடைந்து விட்டது. மத்தியில் வலுவான ஆட்சி அமைய, தென்காசி தொகுதி செழிப்படைய தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இவர் அவர் பேசினார்.

SCROLL FOR NEXT