தமிழகம்

‘கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்’: முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

செய்திப்பிரிவு

சென்னை: “கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத் தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்”, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோவையில், உலகத் தரத்திலான கிரிக்கெட் மைதானம், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டதைப் போல, சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை அடுத்து, தமிழகத்தின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும். நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழகத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்”,என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT