விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர். 
தமிழகம்

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு தமிழக ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. பொதுவாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், அவரது மறைவு மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மறைவு விக்கிரவாண்டி தொகுதி, விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டுமின்றி, கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் அழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமகநிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT